இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது.நேற்று 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இதனை பார்க்க பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி உடையார் தெரு பள்ளி மாணவர்கள் 10 நபர்களை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் இராமநாதன் இரயிலில் அழைத்துச் சென்றார். ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்ற பள்ளி மாணவர்கள் ராக்கெட் விண்ணில் சென்ற நிகழ்வை நேரடியாக பார்த்து மகிழ்ந்தனர். பிறகு சென்னை வந்து ரிப்பன் மாளிகை , விக்டோரியா மஹால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ஆகியவற்றையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை ரயிலில் பயணம் செய்யாத தனது பள்ளி மாணவர்களை ரயிலில் அழைத்துச் சென்ற ஆசிரியரை பெற்றோர்கள் பாராட்டினர். இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி இளஞ்சியம், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தரண்யா ஆகியோர் சென்றிருந்தனர்.
