பேராவூரணி தாலுகா, பாங்கிரான்கொல்லை கிராமத்தில், விழியழகன்கள் மக்கள் பொதுநல இயக்கத்தின் 33 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, இயக்க தலைவர் எஸ்.அருணாச்சலம் தலைமை வகித்தார். விழாவில் குழந்தைகளுக்கான கிராமிய வடிவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடத்தப்பட்டன. மதியம் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலையில், பாட்டு போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் திமுக மேற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் குழ.செ.அருள் நம்பி மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தேவ.தமிழ்குமார் வரவேற்புரை, நிறைவாக, பார்த்திபன் நன்றி கூறினார்.
