பேராவூரணியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆலோசனைக் கூட்டம்

IT TEAM
0

  


தஞ்சாவூர், பிப்.21 - தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி சார்பில், "வெல்லும் தமிழ் பெண்கள்" ஆலோசனைக் கூட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி. பழனிவேல் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேராவூரணி தொகுதி பார்வையாளர் சுப.சரவணன், மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர் பழஞ்சூர் கே.செல்வம், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது, ஒன்றியக்கழக செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், சோம.கண்ணப்பன், கோ.இளங்கோவன், குழ.செ.அருள்நம்பி, செ.ஞானப்பிரகாசம், ஆர்.பன்னீர் செல்வம், நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், ஆர்.மாரிமுத்து, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிர் அணியினர், ஸ்டாலின் மகளிர் படையினர் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கா.அசோக் ராணி தலைமை வகித்தார். நிறைவாக, மகளிர் அணி துணைத் தலைவி ம.சுதா நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top