பேராவூரணி டாக்டர் ஜே ஸி குமரப்பா சென்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்வு

IT TEAM
0

  


பேராவூரணி, பிப். 25- பேராவூரணி டாக்டர் ஜே ஸி குமரப்பா சென்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரி சார்பில் ஆர்.ஏ.டபுள்யூ.இ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளி சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கல்லூரி வேளாண்மை துறை பேராசிரியர் ஆறுமுகம் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம் இயற்கை வேளாண்மையின் பயன்களும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். கல்லூரி மாணவிகள் தயாரித்த ஒருங்கிணைந்த விவசாயம் முறை, சிந்தனையை உருவாக்கும் வகையில் வேளாண் மாணவிகள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தினர். இதில் நிர்வாக அலுவலர் சுரேஷ், கல்லூரி மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top