பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் துவக்க விழா

IT TEAM
0

  


பேராவூரணி, மார்ச் 11- பேராவூரணியில் ரோட்டரி சங்கம் மற்றும் மெகா பவுண்டேஷன் இணைந்து ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் பாலசுப்பிரமணியன், மெகா பவுண்டேஷன் நிறுவனர் நிமல் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி நகரின் மைய பகுதியில் ஆனந்தவல்லி வாய்க்கால் செல்கிறது. 7 கி.மி தூரம் வரை வாய்க்காலை சீரமைக்கும் பணியை, எம்எல்ஏ அசோக்குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகர வர்த்தகர் கழக தலைவர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் வெங்கடேஸ்வர், வி.எ.தனபால், சிவகாமி ஜூவல்லர்ஸ் சாமியப்பன்,தேமுதிக நீலகண்டன், டாக்டர் ரவிச்சந்திரன், ஆலமரத்து விழுதுகள் சாதிக் அலி, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top