பேராவூரணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பான தங்கள் புகாரினை பதிவு செய்ய தொலைபேசி எண் அறிவிப்பு

IT TEAM
0


தஞ்சாவூர், மார்ச்.17 - 
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்மன்ற தேர்தல் தேதி 15.03.2026 அன்று மாலை 4.00 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, 
177.பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) டி.கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பொருட்டு, 
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை தொலைபேசி 04373 232456 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்கள் புகார்களை இணையவழியில் தெரிவித்திடும் பொருட்டு கைப்பேசியில் Play Store மூலம் cVigil App - ஐ பதிவிறக்கம் செய்தோ, http:// elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும், கீழ்க்காணும் இணையதள முகவரியை
1. http://eclinet.eci.gov.in/
2. http://encore.eci.gov.in/Permission Portal
3. http://cvigil.eci.gov.in/Complaint Portal Mobile App (Public Portal)
4. http://suvidha.eci.gov.in/Public Portal பயன்படுத்தி தேர்தல் தொடர்பான தங்கள் புகாரினை பதிவு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top