பேராவூரணி தாலுகா, கூப்புளிக்காடு கிராமத்தில் ஸ்ரீ வீர விநாயகர் தசபுஜ விஸ்வரூப ஸ்ரீ வீரவிநாயகர் ஆலய ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வரும் பங்குனி 11, 25 3 2026 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அறுசுவை அன்னதானமும் நடைபெற உள்ளது. யாக பூஜை நேரங்களில் வேத பாராயணம் தேவார திருமுறை பாராயணம் நாதஸ்வர கீதங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

