பேராவூரணி வட்டம், பேராவூரணி நகர பள்ளிவாசலில் 177, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரமலான் தொழுகை முடித்து வெளியே வந்த 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பேராவூரணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
