பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித உபகரண பெட்டி வழங்கல்

IT TEAM
0


பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித தேர்வுக்கான கணித கருவி பற்றி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், மூத்த  பத்திரிக்கையாளர் கான் முகமது, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.பி.ஆர். ராஜேந்திரன், சமூக ஆர்வலர் திருவேங்கடம் , தினமலர் பத்திரிக்கையாளர் ராஜா, முன்னாள் ஆசிரியர் சிவக்குமார், ஆலமரத்து விழுதுகள் சாதிக் அலி, பேரைத் துளிர் நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் நீலகண்டன், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர்கள் வன்மீக நாதன் மற்றும் வழக்குரைஞர் ஏகாம்பரம்  மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பங்கு கொண்டார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித தேர்வுக்கு உதவக்கூடிய கணித கருவி பெட்டி வழங்கப்பட்டது. பேரைத் துளிர் நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் விஆர்ஜி.நீலகண்டன் நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top