பேராவூரணியில் மெகா பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழா..
உலகம் முழுவதும் நீர் மேலாண்மையில் முத்திரை பதித்து வரும் நீர் மனிதர் என்று அழைக்கப்படுகிற நிமல் ராகவன் அவர்களின் மெகா பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழா பேராவூரணியில் நடைபெற இருக்கிறது. நிகழ்வில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி வேல்முருகன் அவர்கள் கலந்துகொண்டு, அலுவலகத்தை திறந்து வைக்க இருக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை மெகா பவுண்டேஷன் நிறுவனர் நிமல் ராகவன் செய்து வருகிறார்.
