பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில் லயன்ஸ் கிளப், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கிளப் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் மனோகரன் வரவேற்றார். ஸ்ரீவிநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சந்திரமோகன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் குழுவினர், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் குழு கண் நோயாளிகளை பரிசோதனை செய்தனர். இதில், 329 பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், 124 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளர் ராஜா நன்றி கூறினார்.
