பேராவூரணியில் 100% வாக்களிப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பேரணி

IT TEAM
0

 


பேராவூரணி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில், 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை வட்டாரக் கல்வி அலுவலர் க.கலாராணி தலைமையேற்று துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கா.கோகுலகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுநர்  சாஜிதாபானு உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, வாக்களிப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இந்த பேரணி பேராவூரணி கிழக்கு தொடக்கப்பள்ளியில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் வரை நடைபெற்று நிறைவடைந்தது. பேரணியின் போது, “வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை” என்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top