பேராவூரணி, நவ. 29-
பேராவூரணியில் கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் கிளப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கிளப் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். செயலர் பெரியசாமி வரவேற்றார். தனலெட்சுமி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அபிஷேக்ராஜ்பாலாஜி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் நோயாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 230 பேர் புறநோயாளிகளாக கலந்து கொண்டதில் 60 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் வட்டாரத் தலைவர் ராஜ்குமார், நிர்வாகிகள் நீலகண்டன், இளங்கோ, பாண்டியராஜன், தெட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணியன், சபரிகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளர் குமரேசன் நன்றி கூறினார்.
