பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் ஏஎஸ்ஏ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சாசன தலைவர் எம்.நீலகண்டன், நவராத்திரி விழா மாவட்ட தலைவர் கே.இளங்கோ, மாவட்ட தலைவர் வி.பாலசுப்பிரமணியன், மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக, மாவட்ட அவை கூடுதல் செயலாளர் எஸ்.கே.ராமமூர்த்தி, மாவட்ட அவை இணைப்பொருளாளர் எம்.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் ஜீ.வி.நடராஜன், பொருளாளர் து.சிவானந்தம், நிர்வாக அலுவலர் டி.குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி